வேகமான தலை முடி வளர்ச்சிக்கு எண்ணெயோடு சிகப்பு மிளகாயை சேர்த்துங்க…..

0
18

மாசுபட்ட இந்த நவீன உலகில் முடி உதிர்வு பெரும் பிரச்சனையாகி வருகிறது. இதற்க்கு என்ன காரணங்கள் என்று பார்த்தால் மாசு, சரியான பராமரிப்பு இன்மை, அதிக படியான உளைச்சல் இது போன்ற பல காரணங்களால் முடி உதிர்வு , வழுக்கை, அடர்த்தியின்மை, போடு போன்ற பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

1a

சிவப்பு மிளகாய்….

சிவப்பு மிளகாயில் கேப்சைன் என்னும் வேதி பொருள் உள்ளது. அது கூந்தல் வளர்ச்சியைத் தூண்டி கூந்தல் மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றும் தன்மை உடையது.

2a

ஆலிவ் ஆயில் உடன் சிகப்பு மிளகாய் :

மிளகாயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு ஜாடியில் ஆலிவ் ஆயிலுடன் நறுக்கிய துண்டுகளை ஜாடியில் போட்டு மூடிவிடவும், பின்னர் அந்த ஜாடியை 10 – 15 நாட்கள் குளிர்ச்சியான இடத்தில் வைக்க வேண்டும். சில நாட்கள் கழித்து எண்ணெய் மட்டும் தனியாக எடுத்து வடிகட்டி மிளகாய் துண்டுகளை தனியாக தூக்கி எறிந்து விட வேண்டும். இந்த எண்ணெயை தலையில் நன்கு தேய்த்து மசாஜ் போன்ற செய்து ஒரு மணி நேரம் ஊற விட வேண்டும், பிறகு மென்மையான ஷாம்புவைக் கொண்டு உங்கள் தலையை அலச வேண்டும் இது போன்று வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்துவர உங்கள் கூந்தல் வளர்ச்சி அடைவதை நீங்களே கண்கூடாக காணலாம்.

1c

விளக்கெண்ணெய் மற்றும் சிவப்பு மிளகாய்:

ஒரு கப் விளக்கெண்ணெய், இரண்டு ஸ்பூன் மிளகாய் துண்டுகள் இரண்டையும் ஒரு ஜாடியில் வைக்க வேண்டும் ஜாடியை சூரிய ஒளி படாத இடத்தில் வைக்க வேண்டும். பின்னர் எண்ணெயை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் அந்த எண்ணெயை எடுத்து தலைக்கு மசாஜ் போன்று தலை முழுக்க தடவி மசாஜ் செய்ய வேண்டும் 30 அல்லது 20 நிமிடம் கழித்து மென்மையான ஷாம்புவால் தலையை அலச வேண்டும் இவ்வாறு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தொடர்ந்து செய்து வர நல்ல பலன் கிட்டும்.

பயம் வேண்டாம்:

மிளகாய் என்றாலே எல்லாருக்கும் ஒரு பயம் தான் அதை அதிகமாக எடுத்துக் கொண்டாலே பல பிரச்சனைகள் வரும் என்று, அதுவும் தலையில் தேய்த்தால் எரிச்சல் உண்டாகும் என்று பயப்படத் தேவை இல்லை. அதிகப்படியான அடர்த்தியான எண்ணெய் சேர்ப்பதால் எரிச்சல் இருக்காது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here