அரை மணி நேரத்தில் அருமையான இறால் வறுவல் செய்து அசத்த…. இந்த குறிப்பை பயன்படுத்துங்க….

0
25

கடல் உணவுகளில் தனக்கென தனி இடத்தை கொண்டதுதான் இறால். மற்ற கடல் உணவுகளை விட இதன்  விலையும் சற்று அதிகம் தான். ஆனால் இது சத்து நிறைந்த மற்றும் சுவையானதும் கூட, என்பதால்  இதன் மார்க்கெட் உச்சத்தில் தான், இதனை நன்மை உடைய இறால் வறுவல் செய்வது எப்படி என்று இந்த பதிவில் காண்போம்.

13

தேவையான பொருட்கள் :

அரை கிலோ இறால், ஒரு வெங்காயம் , ஒரு கைப்பிடி கருவேப்பிலை, 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, கால் ஸ்பூன் மஞ்சள், ஒரு ஸ்பூன் மலிலித் தூள், ஒரு ஸ்பூன் கரம் மசாலா, ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள் மற்றும் உப்பு.

12

செய்முறை :

முதலில் ஒரு பெரிய பௌலில் இறாலை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனோடு இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மல்லித் தூள், கரம் மசாலா மிளகாய்த் தூள் எல்லாம் சேர்த்து நன்றாக கலக்கி கால் மணி நேரம் ஊற வைக்க  வேண்டும்.

பின்னர் இரு வாணலில் எண்ணெய் இல்லாமல் இறாலை வேகவைத்து தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும். ஒரு வாணலில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாயை போட வேண்டும். பின்னர் கறிவேப்பிலை சேர்த்து வேகவைத்துள்ள இறாலை போட்டு நன்றாக வணக்க வேண்டும். 10 நிமிடம் கழித்து இறக்கி பரிமாறினால் சுவையான இறால் வறுவல் தயார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here