பிஸ்கட் விரும்பியா நீங்கள் ? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்…

0
34

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் கூட நஞ்சு என்று  நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள். அமிர்தமே நஞ்சாகும் பட்சத்தில் பிஸ்கட் எம்மாத்திரம் ? மேலும் பிஸ்கட் செய்யும் போது பல வேதி பொருட்களும் ரசாயனங்களும் சேர்க்கப் படுகிறது. அவை உடலுக்கு என்னென்ன தீங்கை கொண்டு வருகிறது என்பதை இப்பதிவில் காண்போம். 

5

பிஸ்கட் மிருதுவாக இருக்க குளூட்டன் சேர்க்கப்படுகிறது. பிஸ்கட்டின் வடிவத்துக்காகச் சர்க்கரை, சுக்ரோஸ் மற்றும் குளுக்கோஸ், ஈஸ்ட்,  சோடியம்  பைகார்பனேட், நிறமிகள் போன்றவை சேர்க்கப்படுகின்றன. பிஸ்கட் எந்த அளவுக்கு மிருதுவாக உள்ளதோ, அந்த அளவுக்கு அதிகப்  புரதச் சத்துகளைக் கொண்டது. மிருதுத்தன்மை குறைந்தால், கொழுப்புச்சத்தின் அளவு நிறைந்துள்ளது  என்று அர்த்தம். இதில் ஸ்ஃபேட் அமிலங்கள் எத்தனை சதவிகிதம் இருக்கின்றன என்பதை அதன் உறையில் பெரும்பாலும் குறிப்பிடுவதில்லை. உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் இவற்றை சாப்பிடுவது தேவையற்ற விளைவுகளையே இது ஏற்படுத்திகிறது.  சுவை, நிறம், பதப்படுத்துதல் போன்ற காரணங்களுக்காகப் பயன்படுத்துகிற சில வேதிப்பொருட்கள் தடை செய்யப்பட்டவையாகவும்  கூட, இருக்கிறது.

4

பிஸ்கட்டின் வேலையே பசி எடுக்காமல் செய்வது தான். ஒரு குழந்தை மூன்று பிஸ்கட் சாப்பிட்டால், பசியே எடுக்காது. பெரும்பாலானவர்கள், க்ரீம் பிஸ்கட்டைக் கண்டிப்பாகத் தவிர்க்க  வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலை மற்றும் மாலை நேர பிரேக்கில் சாப்பிட பிஸ்கட்க்கு பதில் பழங்களைச் சாப்பிடக் கொடுங்கள். இது பசியைத் தூண்டுவதுடன்,  கூடுதல் சத்துகளைக் கொடுக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here