இரவில் தனியாக தூங்க பயப்படும் பாலிவுட் ஹீரோ……

0
26

பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ராஃபின் மகனான டைகர் ஷ்ராஃப் தற்போது ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். புனித் மல்ஹோத்ரா இயக்கி வரும் இந்த படத்தில் அனன்யா பாண்டே, தாரா என்று 2 ஹீரோயின்கள். படம் வரும் மே மாதம் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது.

ts1

பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹார் நடத்தும் காபி வித் கரண் நிகழ்ச்சியில் டைகர் கலந்து கொண்டார். நான் குழந்தையாக இருந்தபோது ஹாரர் படம் ஒன்று பார்த்தேன். அதில் இருந்து பெரிய அறையில் தனியாக படுத்து தூங்க பயப்படுவேன். வீட்டில் இருந்தால் அம்மாவுடன் படுத்துக் கொள்வேன். படப்பிடிப்புக்கு சென்றால் படக்குழுவில் யாரையாவது துணைக்கு படுக்குமாறு அழைப்பேன் என்று டைகர் கரணிடம் கூறினார். திஷாவும், டைகரும் காதலிப்பதாக பல காலமாக பாலிவுட்டில் பேசப்படுகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மதியமும் இருவரும் ஜோடியாக சாப்பிட ஹோட்டலுக்கு செல்வார்கள். இது குறித்து கரண் டைகரிடம் கேள்வி எழுப்பினார். அதற்க்கு ரொம்ப பிடிக்கும் நானும், திஷாவும் நல்ல நண்பர்கள். அவருடன் சேர்ந்து நேரம் செலவிட பிடிக்கும். எங்களுக்கு இடையே நிறைய ஒற்றுமை இருக்கிறது. எனக்கு சினிமா துறையில் ஒரு சிலர் மட்டுமே நண்பர்கள். அதில் திஷாவும் ஒருவர் என்று கூறி கரண் எதிர்பார்த்த பதிலையே அளித்தார் டைகர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here