சுவையான மில்க் பேடா இனி வீட்டிலேயே செய்யலாம் ஈஸியா…

0
46

புகழ்பெற்ற ஸ்வீட்டில் இதும் ஒன்று. பண்டிகை மற்றும் சுபநிகழ்ச்சியின்போது இதை விரும்பி செய்வர். இதை பாலில் தான் முக்கியமாக செய்வார்கள். எல்லோராலும் விரும்பி சாப்பிடப்படும். இந்தியாவின் எல்லா கடைகளிலும் கிடைக்கும். மில்க் பேடா செய்வதற்கு பால் பவுடர் மற்றும் கெட்டியான பால் உபயோகப்படுகிறது. எல்லோருக்கும் பிடித்த ஸ்வீட் ரெசிபி இது. சரி வாங்க இப்போது இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

mp4

தேவையான பொருட்கள்:

கெட்டியான பால் – 200 கிராம், பால் பவுடர் – 3/4 கப், நெய் – 1/2 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் பொடி – 1 டேபிள் ஸ்பூன், ஜாதிக்காய் பொடி – கொஞ்சம், குங்குமப் பூ – 3-4.

செய்முறை:

அடுப்பில் கடாயை வைத்து மிதமான சூட்டில் நெய் சேர்க்கவும். இதனுடன் பால் பவுடர் மற்றும் கெட்டியான பாலை சேர்த்து நன்றாக கிளறி கொண்டு இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் விடவும். அடிப்பகுதி பிடிக்காத அளவு பார்த்துக் கொள்ளவும். பிறகு அதனுடன் ஏலக்காய் மற்றும் ஜாதிக்காய் பொடியை சேர்த்து நன்றாக கிளறி விட்டு பாத்திரத்தில் ஒட்டாத வரை சமைக்கவும். ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் ஆற வைக்க வேண்டும். ஆறிய பிறகு குங்குமப்பூ சேர்க்கவும். இப்பொழுது உங்கள் உள்ளங்கையைக் கொண்டு சின்னச் சின்ன உருண்டையாக உருட்டி எடுக்கவும். இப்பொழுது பேடா வடிவத்திற்கு தட்டவும். இதில் உங்கள் பெருவிரல் பதிக்கவும். பால் பவுடர் மற்றும் கெட்டியான பாலுக்கு பதிலாக பால் மற்றும் சர்க்கரை பயன்படுத்தி இதை செய்யலாம். அதே மாதிரி கொயா பயன்படுத்தியும் செய்யலாம்.

mp2 - Copy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here