சுவையான சர்க்கரை வள்ளிக் கிழங்கு பாயசம்… மீண்டும் சுவைக்க தூண்டும் சுவை ….

0
22

உங்கள் விரத நாளை சிறந்த உணவுடன் கொண்டாட இந்த சிறிய ஸ்வீட் சரியானதாக அமைய போகிறது இதன் நறுமணமும் சுவையும் கண்டிப்பாக உங்கள் நாவின் சுவை மொட்டுகளை மலரவைக்கும் விரத பண்டிகையின் போது உங்கள் பிஸியான நேரத்திலும் கூட இந்த ரெசிபியை எளிதாக செய்து அசத்தி விடலாம். இந்த தித்திக்கும் சர்க்கரை வள்ளி கிழங்கின் பாயாசத்தை எப்படி செய்வதென்று இங்கு பார்க்கலாம்.

1.....

INGREDIENTS:

ஜவ்வரிசி – 3 டேபிள் ஸ்பூன், சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன், சர்க்கரை வள்ளிக் கிழங்கு – 1, முந்திரி பருப்பு (தோல் நீக்கியது) – 1டேபிள் ஸ்பூன், பாதாம் பருப்பு (தோல் நீக்கியது) – 1 டேபிள் ஸ்பூன், பால் – 3 கப், ஏலக்காய் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியை எடுத்து கொள்ளவும், அதில் தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும், ஒரு குக்கரை எடுத்து அதில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை பாதியாக வெட்டி வைக்கவும், அதில் தண்ணீர் சேர்த்து 3-4 விசில் வரும் வரை வேக வைக்கவும். வேக வைத்த கிழங்கின் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும், ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பால் சேர்க்கவும் 3-5 நிமிடங்கள் பாலை நன்றாகக் கொதிக்க விட்டு அதில் ஜவ்வரிசி சேர்க்கவும் நன்றாக கலக்கி குறைந்த தீயில் 4-5 நிமிடங்கள் பாலை வைத்திருக்க வேண்டும், அதனுடன் சர்க்கரை, முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இவற்றைச் சேர்த்து நன்றாக கிளறி 2 நிமிடங்கள் சமைக்கவும், வேக வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக கிளறவும் பிறகு குங்குமப் பூ, ஏலக்காய் சேர்த்து நன்றாக கிளறவும் அடுப்பை அணைத்து விட்டு, ஒரு பாத்திரத்தில் மாற்றி கொள்ளுங்கள், அப்படியே பாதாம் பருப்பை அதன் மேல் தூவி அலங்கரித்து சூடாக அல்லது ஆறின பிறகு பரிமாறுங்கள், சுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு கீர் ரெசிபி ரெடி.

sw4

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here