கர்நாடக தம்பிட்டு சாப்பிட்டு இருக்கீங்களா ? எளிய முறையில் தம்பிட்டு செய்யலாம் வீட்டிலேயே….

0
29

தம்புட்டு என்பது கர்நாடகாவின் பேமஸ் உணவுகளில் ஒன்று . மெதுவான பந்து போல வறுத்த பொரி கடலை பருப்பு செய்து அதன் மேல் அப்படியே நெய் சொட்ட சொட்ட நறுமணமிக்க ஏலக்காய் சுவையுடன் ஒரு கடி கடிக்கும் போது வாயில் எச்சில் ஊறும். தம்புட்டு ரெசிபி வீட்டில் எப்படி செய்வது என்று இங்கு பார்க்கலாம்.

A1

INGREDIENTS:
அரிசி மாவு – 1/2 கப் , பொரிகடலை – 1/2 கப் , உலர்ந்த, தேங்காய் துருவல் – 1/2 கப், நிலக்கடலை – 1/2 கப், வெல்லம் – 3/4 கப், உலர்ந்த பழங்கள் (முந்திரி +உலர்ந்த திராட்சை, பழங்கள்) – 8-10 (உடைத்தது) , நெய் – 1/2 கப் தண்ணீர் – 1/4 கப் , ஏலக்காய் – 4

செய்முறை:

ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் ஊற்ற வேண்டும், அதில் முந்திரி பருப்பு மற்றும் உலர்ந்த திராட்சை பழங்கள் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும், அதை தனியாக எடுத்து வைக்கவும், இப்பொழுது அதே கடாயில் பொரி கடலை, நிலக்கடலை மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும், 1-2 நிமிடங்கள் வரை வறுத்து ஒரு மிக்ஸி சாரில் தட்ட வேண்டும், இப்பொழுது எல்லாவற்றையும் கரகரப்பாக அரைத்து கொள்ளவும், அடுப்பில் மற்றொரு கடாயை வைத்து அதில் வெல்லம், தண்ணீர் சேர்த்து சூடுபடுத்த வேண்டும், வெல்லம் முழுவதுமாக கரைந்து கொஞ்சம் கெட்டியான பதம் வரும் வரை சூடுபடுத்தவும், இப்பொழுது அரைத்த கடலை கலவை, நெய் ,அரிசி மாவு போன்றவற்றை வெல்லத்துடன் சேர்த்து கிளற வேண்டும்,  வறுத்த உலர்ந்த பழங்களையும் சேர்த்து நன்றாக கிளறவும், இதை தட்டில் தட்டி சில நிமிடங்கள் ஆற விடவும், பிறகு பந்து அல்லது உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் உருட்டி ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here