குழந்தைகளுக்கு தடிப்பு தடிப்பாக உள்ளதா ? கவலை வேண்டாம்… இதை செய்ங்க தடிப்பு மறைந்து விடும்…பகுதி-1

0
39

குழந்தைகளின் சருமம் ரெம்பவே சென்ஸ்டிவ் ஆக இருக்கும். அவர்களின் சருமம் பட்டு போல் மென்மையாக இருப்பதால் சீக்கிரம் அலற்சியை ஏற்படுத்தி விடும். நாம் போடும் டயப்பர், சுற்றுப்புற மாசுக்கள், அழுக்கு, சோப்பு போன்றவைகள் அவர்களின் சருமத்தில் எளிதில் ரேசஸை உண்டாக்கக் கூடும். குழந்தைகள் என்பதால் கண்ட கண்ட கெமிக்கல் க்ரீம்களை போடவும் நமக்கு பயமாக இருக்கும். எனவே இந்த சரும அலற்சியை சில இயற்கை பொருட்களைக் கொண்டே விரட்டலாம். அதைப் பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண போகிறோம்.

br4

வாழைப்பழ தோல்:

வாழைப்பழ தோல் சரும அழற்சியை போக்க பெரிதும் உதவுகிறது. வாழைப்பழ தோலை ஒரு மணி நேரம் பிரிட்ஜில் வைத்து சரும வடுக்கள் உள்ள இடத்தில் தடவுங்கள். குழந்தைகளின் சருமத்தை ஈரப்பதமாக்கி சரும வடுக்களையும் நீக்கி விடும்.

Banana Skin on white background

கற்றாழை ஜெல்:

சரும ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இதன் ஆன்டி மைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருள் தன்மையால் சரும க்ரீம்களாக கூட பயன்படுகிறது. பயன்படுத்தும் முறை கற்றாழை ஜெல்லை மட்டும் தனியாக எடுத்து சரும வடுக்கள் உள்ள பகுதிகளில் அப்ளை செய்யுங்கள்.  வடுக்கள் மாயமாய் மறைந்து விடும்.

br2

ஆலிவ் ஆயில் இது ஒரு இயற்கையான சரும சுத்திகரிப்பு எண்ணெய் என்று சொல்லலாம். காரணம் இது சருமத்தின் மீதுள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. இதிலுள்ள ஓலியோகேந்தல் சருமத்தில் ஏற்படும் அழற்சியை போக்குகிறது. மேலும் இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் விட்டமின் ஈ சரும பாதிப்பை குணப்படுத்துகிறது. எனவே குழந்தைகளின் சருமத்தில் இதை அப்ளே செய்து பலன் பெறலாம்.

2a

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here