பிரெஞ்சு பிரைஸ் வீட்டிலேயே அதுவும் ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் எளிய முறையில் செய்யணுமா ? அப்போ இந்த குறிப்பு உங்களுக்கு தான்….

0
38

பிங்கர் சிப்ஸ் அல்லது பிரெஞ்சு பிரைஸ் என்னும் உணவானது குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாகும். இன்று இருக்கும் உணவு பட்டியலில் அதிகம் விற்பனையாகும் உணவுகளில் இதுவும் ஒன்று. சரி வாங்க நண்பர்களே எப்படி இந்த சுவையான பிரெஞ்சு பிரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

33

தேவையான பொருட்கள் :

நீளமான 4 உருளைக் கிழங்கு (நீள நீளமாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்), கால் ஸ்பூன் மிளகுத்தூள் மற்றும் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள்.

 

32

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் பாதியளவு தண்ணீர் எடுத்துக் கொள்ள  வேண்டும். பின்னர் தண்ணீரை நன்றாக சூடாக்கி, கொதிக்கும் பொது வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கை போட வேண்டும். பின்னர் தண்ணீரை வடிகட்டி உருளைக்கிழங்கை உணர்த்தி பிரீசரில் ஒரு மணி நேரம் வைக்க வேண்டும். பின்னர் ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் உருளைக் கிழங்கை போட வேண்டும், அவற்றை அரை வேக்காட்டில் பொறித்து எடுக்க வேண்டும். அடுப்பில் சூட்டை அதிகப் படுத்தி திரும்பவும் பொரித்த உருளைக் கிழங்கை தீப் பிரி செய்து நிறம் மாறாமல் பொன்னிறமாக பொறித்து எடுத்து, மிளகு மற்றும் மிளகாய்த் தூளை தூவி சாஸுடன் பரிமாற, சுவையான பிரெஞ்சு பிரைஸ் ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here