சூப்பரான மாலை சிற்றுண்டி ஆளு கார்ன் செய்து எப்படி தெரியுமா? உங்களுக்காக தான் இந்த குறிப்பு..

0
35

மாலையில் குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் கொடுப்பது வழக்கம். அந்த ஸ்னாக்க்ஷை  அவர்களுக்கு பிடித்த மாதிரி வீட்டிலேயே  செய்து தந்தால் அவர்களும் சந்தோசப் படுவார்கள், நமக்கும் ஒரு திருப்தி இருக்கும். அப்படி ஒரு சூப்பரான ஆளு கார்ன் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

52

தேவையான பொருட்கள் :

உருளைக் கிழங்கு ( தூள் நீக்கி துண்டு துண்டாக பொறித்து வைத்துக்கொள்ள வேண்டும் ), 2 வெங்காயம், 2  தக்காளி, ஒரு பட்டை, ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், அரை ஸ்பூன் மல்லித்தூள், அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் சோம்பு மற்றும் ஒரு கப் வேகவைத்த கார்ன்.

53

செய்முறை :

ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி  எண்ணெய் காய்ந்தவுடன் பட்டை, சோம்பு சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். பின்னர் வெட்டி வைத்த வெங்காயம் மாற்று தக்காளி சேர்க்க வேண்டும். மஞ்சள், மல்லி மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர்  பொரித்து வைத்துள்ள உருளைக் கிழங்கை சேர்க்க வேண்டும், அதன்பிறகு  வேகவைத்த கார்ன் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி 15  நிமிடம் ஊற வைக்க வேண்டும். ஆளு கார்னை வேற பாத்திரத்தில் மாற்றி பரிமாறினால்சுவையான ஆளு கார்ன் ரெடி..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here