அசத்தலான முட்டை பிரட் ரோல் சுவையா செய்வது எப்படினு தெரியுமா ? வாங்க பார்க்கலாம்…

0
26

குழந்தைகளுக்கு  பேக்கரி உணவு என்றாலே குழந்தைகளுக்கு தனி சந்தோசம் தான். ஆனால் தொடர்ந்து அந்த பதார்த்தங்களை குழந்தைகள் சாப்பிட்டால் அவர்கள் உடல் நலத்திர்கு அது கேடாகி விடும். வீட்டில் அவர்களுக்கு பிடித்த உணவை நாமே செய்து தந்தால் அவர்களுக்கும் சன்தோஷம் நமக்கும் திருப்தி. சரி முட்டை  பிரட் ரோல்  சுவையா செய்வது எப்படி என்று இந்த பதிவில் காண்போம்.

10

தேவையான பொருட்கள் :

பிரட் துண்டுகள் 10 , முட்டை 3 , பொடிப்பொடியாக நறுக்கிய வெங்காயம் 3 , ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன், கடலை மாவு ஒரு கப் ,  கரம் மசாலா கால் ஸ்பூன், சிக்கன் மசாலா கால் ஸ்பூன் மற்றும் தேவையான அளவு உப்பு.

9

செய்முறை :

முட்டை ஸ்டப்:

ஒரு வாணலில் என்னை ஊற்றி காய்ந்தது கல் ஸ்பூன் சோம்பு சேர்க்க வேண்டும், பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்க்க வேண்டும். தற்போது வெட்டி வைத்துள்ள வெங்காயத்தை போடு நன்றாக வதக்க வேண்டும்,

மேலே கூறப்பட்டுள்ள பொடிகளை ஒவ்வொன்றாக சேர்க்க வேண்டும் பின்னர் முட்டையை உடைத்து நன்றாக கிண்ட வேண்டும், முட்டை நன்றாக வெந்ததும் உப்பு சேர்த்து தனித்த எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிரட் துண்டுகளை எடுத்து அவற்றின் ஓரங்களை வெட்டி தனியாக எடுத்து அரைத்து வைத்து கொள்ள வேண்டும், பிரட் துண்டுகளை தண்ணீர் தொட்டு நனைக்க வேண்டும். பின்னர் இரண்டு பிரட் துண்டை இணைத்து அதில் முட்டை ஸ்டப் வைத்து மடித்து அழுத்தி விட வேண்டும். கடலைமாவில் நனைத்து அரைத்த பிரட் மாவில் உருட்டி எண்ணெய்யில் பொறித்து எடுத்தல் சுவையான முட்டை பிரட் ரோல் ரெடி…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here