பொலிவான முகம் வேண்டுமா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான் !!

0
42

யாருக்குத் தான் பிடிக்காது அழகாக தோற்றமளிக்க, அழகு என்பது ஆண் பெண் என இருபாலருக்கும் உரியது, வெளித்தோற்றத்தில்,குறிப்பாக முகத்திற்கு அதிக அளவில் அக்கறை கட்டுபவர்கள் பெண்கள் என எண்ணுவார்கள், ஆனால் ஆண்களும் தங்களது வெளித்தோற்றத்தில் கவனம் செலுத்தி வருகின்றன. அப்படி அக்கறை காட்டுபவரா நீங்கள் ? இந்த பதிவு உங்களுக்கு தான்!!

பெண்களின் சருமத்தைக் காட்டிலும் ஆண்களின் சருமம் சற்று கடினமானது, இதற்காக நீங்கள் பணமோ, அதிக நேரமா செலவிட வேண்டாம். வீட்டில் உள்ள  பொருட்களை பயன்படுத்தினாலே போதும்…

சருமப் பாதுகாப்பு :

மழலை பருவத்தில் நம்முடைய சருமம் மிகவும் மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்கும் ஆனால் நாம் வளர்ச்சியடைய நாளைக்கு நாள்  முகம் கடினமாகும். இதில் இருபாலருக்கும் வித்தியாசம் உண்டு.

குறிப்பு # 1:
உங்கள் முகம் வேகமாய் அழகாக மாற பால் மற்றும் எலுமிச்சையை உதவும். 1 ஸ்பூன் பாலில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறை கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால், உங்கள் முகத்தில் நிறமாற்றத்தைக் காணலாம்.

குறிப்பு # 2 :

குறைந்த நேரத்தில் முகத்தை அழகாக்க தயிர் போதும், 2 ஸ்பூன் தயிருடன் 1 ஸ்பூன் மஞ்சள் சேர்த்து முகத்தில் பூச வேண்டும். பிறகு 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இது போன்று தொடர்ந்து செய்து வர முகம் நாளுக்கு நாள் பொலிவாகி வருவதை நீங்களே கிங் கோடாக் காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here