சுவையும் சத்தும் நிறைத்த ருசியான தினைமாவு பூரி சாப்பிடணுமா ? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்…

0
110

ராஜ்கிரா  பூரி என்பது ரொம்ப ஸ்பெஷலான ஒரு உணவுவாகும். ராஜ்கிரா மாவை பிணைந்து அதனுடன் உருளைக் கிழங்கைத் துருவி சேர்த்தால் ருசியாக இருக்கும். அதன் மென்மையான அமைப்பும் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். குறைந்த உணவை உண்டால் உங்கள் டயட் ஃபாலோ செய்பவர்கள் கூட எடுத்துக்கொண்டு மகிழலாம்  இந்த நவராத்திரி விரதத்தை நீங்கள் இந்த பூரியுடன் சேர்த்துக்கொண்டு செய்வதன் மூலம் இது உங்கள் விரதத்தை மேலும்  சிறப்பாகும்.

tp5
Untitled design (1)

தேவையான பொருட்கள்:

ராஜ்கிரா மாவு (தினை) – 1 கப், உருளைக்கிழங்கு – 1, கொத்தமல்லி இலைகள்-நறுக்கியது (1 கைப்பிடியளவு), இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – பொரிப்பதற்கு, ராக் உப்பு – 1 டேபிள் ஸ்பூன், நெய் – 2 டேபிள் ஸ்பூன்.

 

செய்முறை:

உருளைக்கிழங்கை வேக வைத்து அதன் தோலை உரித்து கொள்ளவும், பிறகு அதை நன்றாக பிசைந்து கொள்ளவும். இதனுடன் இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி இலைகள், ராக் சால்ட், நெய் இவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும், அதனுடன் ராஜ்கிரா மாவையும் சேர்த்து அப்படியே மாவை பூரி பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும், 5-10 நிமிடங்கள் அப்படியே வைத்து இருந்து பிறகு சின்ன சின்ன உருண்டைகளாக மாவை உருட்டி கொள்ளவும், ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி 4-5 நிமிடங்கள் வரை சூடுபடுத்தவும், ஒவ்வொரு உருண்டையையும் பூரி மாதிரி தேய்த்து ஒவ்வொன்றாக பொரித்து எடுக்கவும், பூரியின் விளம்புகள் நன்றாக மொறு மொறுவென வரும் வரை காத்திருந்து பொரிக்கவும், அப்படியே அதை ஒரு தட்டிற்கு மாற்றி உங்களுக்கு பிடித்தமான சைடிஸ் உடன் பரிமாறவும்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here