வட துருவத்தில் வேகமாக நகரும் காந்தப்புலம்,,,,, தலைகீழாகும் பூமி!

0
23

பூமியின் வட துருவத்தில் காந்தப் புலம் விரைவாக மாற்றம் அடைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பூமியின் காந்தப் புலங்கள் 7.8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தலைகீழாக மாறியது, தற்போது மீண்டும் அதே போல காந்தபுலம் தலைகீழாகி வருவதற்கான அறிகுறிகள் தெரியவதாக பல ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

np3

பூமிப் பந்தின் வட துருவ காந்தப் புலம் தொடர்ந்து நகர்ந்து வருகிறது. 1881ஆம் ஆண்டில் வட புலம் துல்லியமாக குறிக்கப்பட்டது. ஆனால், அப்போதிருந்தே அது ஆண்டுக்கு, 10 கி.மீ., இடம் பெயர்ந்து வருவகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஆனால், இந்த வேகம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளதாம். ஆண்டுக்கு 30 முதல் 40 கி. மீட்டர் வரை வட காந்தப் புலம் நகர்ந்து வந்துக் கொண்டிருக்கிறதாம்.

np2

இதனால் திசைகாட்டிகளில் (compass) மாற்றம் ஏற்படத் தொடங்கி உள்ளதாக கப்பல்கள், விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்றவற்றில் உள்ள திசைகாட்டிகளை மேம்படுத்தி அமைக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். 2020ஆம் ஆண்டில் உலக காந்த திசைகாட்டி மாதிரியின் ஐந்தாண்டு புதுப்பிப்பு செய்யப்படும் என்றும், அதனை அமெரிக்காவின், தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் வட புல நகர்வை தொடர்ந்து, காந்த மாதிரியை புதுப்பித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here