ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் கோபி பட்டர் மசாலா வீட்டிலே செய்யலாம்….

0
91

கோபி பட்டர் மசாலா பேமஸ் வட இந்திய ரெசிபி. பலரும் இதை வயது வித்தியாசம் இன்றி விரும்பி சாப்பிடுவார்கள். தமிழகத்திலும் இது பிரசித்தி பெற்ற உணவுகளின் பட்டியலில் இடம் பெற்று விட்டது. இந்த சுவையான கோபி,பட்டர் மசாலா செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிஞ்சதுக்கு கொள்வோம்.

63

தேவையான பொருட்கள் :

அரை காலி பிளவர்,  இஞ்சி பூண்டு விழுது மூன்று  ஸ்பூன், மிளகாய் தூள் 2 ஸ்பூன், கரம் மசாலா 1 ஸ்பூன், மல்லித் தூள் 1 ஸ்பூன், வெண்ணை ஒரு ஸ்பூன் , நெய் ஒரு ஸ்பூன், கஸ்தூரி மேத்தி ஒரு கைப் பிடி, அரிசி மாவு ஒரு ஸ்பூன் , பட்டை 1 , சோம்பு ஒரு ஸ்பூன், அண்ணாச்சி இலை ,  கான் ப்ளர் ஒரு   ஸ்பூன்,  கடலை மாவு ஒரு ஸ்பூன், வெங்காயம் 3  மற்றும்  தக்காளி 2 .

Gobi Butter Masala

செய்முறை :

முதலில் ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைத்த நீரில் மஞ்சள் உப்பு சேர்த்து காலிபிளவர் சேர்த்து  3 நிமிஷம் அப்படியே விட  வேண்டும். பின்னர் ஒரு சுத்தமான பௌலில் வேகவைத்த காலிஃளரை எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது மூன்று ஸ்பூன் , அரிசி மாவு, கடலை மாவு, கான் ப்ளர், மல்லித்தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, எல்லாம் சேர்த்து நன்றாக மரினட் செய்து 15  நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதை எண்ணையில் பொறித்து எடுத்து தனியாக ஒரு பௌலில் வைக்க வேண்டும்பின்னர் ஒரு கடாயில் எண்ணையை ஊற்றி, என்னை காய்ந்தவுடன் பட்டை, அண்ணாச்சி இலை,சோம்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும், பின்னர் வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதங்க விட வேண்டும். பின்னர் இந்த கலவையை நன்றாக மிஸ்சியில் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வாணலில் பட்டர் நெய் ஊற்றி அந்த கலவையை ஊற்ற வேண்டும் பின்னர் ஒரு கப் பால் சேர்க்க வேண்டும், பொறித்து வைத்துள்ள காலிஃளரை போட்டு, கொதிக்க வைக்க வேண்டும், கொதித்ததும் கஸ்தூரி மேத்தி தூவி இறக்கினால் சுவையான கோபி பட்டர் மசாலா ரெடி..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here