குழந்தைக்கு சாப்பிட்டது ஜீரணமாகலான இதை மட்டும் செய்ங்க போதும்…

0
21

குழந்தையின் செரிமான மண்டலம் மிகவும் மிருதுவானது. பிறக்கும்போது குழந்தையின் செரிமான மண்டலம் முழுமையாக வளர்ச்சி பெறாமல் இருப்பதால்  பிறந்த பிறகு நாளுக்குள் நாள் தான்  வளார்ச்சிஅடையும், தொற்று மற்றும் நோய் பாதிப்பு உண்டாவதற்கான காரணம் நிறைய  உண்டு. ஒரு தவறான மூலப்பொருள் போன்றவை கூட அவர்களின் செரிமான பாதையில் இடையூறை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.

mb1

குழந்தையின் ஜீரணம்:

தாய்மார்கள், குறிப்பாக முதன்முறையாக தாய்மையை அனுபவிப்பவர்கள் அவர்கள் குழந்தையின் செரிமான ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக  இருப்பார்கள் . குழந்தையின் வயது காரணமாக அவர்களின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் மருந்துகள் கொடுப்பது முடியாத காரியம். எனவே  இயற்கைத் தீர்வுகள் மூலமாக மட்டுமே அவர்களின் ப்ரிச்சனைகளை  சரி செய்ய முடியும். இதனால் பக்க விளைவுகள் தவிர்க்கப் படுகின்றன.

mb2

தாய்ப்பால் கொடுக்கும் முறை:

தாய்ப்பால் குடிக்கும்போது குழந்தையின் உடல்  தவறான நிலையில் இருப்பதும் செரிமான தொந்தரவு ஏற்படக் காரணமாக உள்ளது. இதனால் வாய்வு அல்லது எதுக்களித்தல் போன்றவை உண்டாகலாம். தாய்ப்பால் கொடுக்கும்போது, குழந்தையின் தலைப் பகுதி, வயிற்றுப் பகுதியை விட மேலே உயர்வாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். இந்த நிலையில் தாய்ப்பால் பருகுவதால் பால் நேரடியாக கீழே வயிறு நோக்கி செல்ல இயலும், வயிற்றில் உள்ள காற்றும் ஏப்பமாக மேலே எழும்பி வந்துவிடும்.

mb3

மசாஜ்:

குழந்தையின் வயிற்றில் மிருதுவாக மசாஜ் செய்வதால் குழந்தையின் செரிமான பிரச்சனை குறையும். குழந்தையின் தொப்புளை சுற்றியுள்ள பகுதியில் மென்மையாக மசாஜ் செய்யவும். பேபி எண்ணெய் அல்லது க்ரீம் பயன்படுத்தி வயிற்றில் மசாஜ் செய்யலாம்.

mb5

கிரைப் வாட்டர்:

குழந்தையின் வயிறு தொடர்பான எல்லா பிரச்சனைகளுக்கும் பல காலமாக சிறந்த தீர்வைத் தந்து வருவது கிரைப் வாட்டர். தண்ணீர், சோடியம் கார்போனேட் மற்றும் பல மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படுவது இந்த கிரைப் வாட்டர். மேலும் குழந்தையின் வாய்வு தொந்தரவைப் போக்க மிகவும் பாதுகாப்பான ஒரு மருந்து இது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here