கார்த்தியிடம் வாங்கிகட்டிக் கொண்ட கஸ்தூரி…. மரண கலாய்களைத்த நெட்டிஸின்கள்…

0
37

கே.சி. சுந்தரம் இயக்கத்தில் ஆனந்த் நாக், அஞ்சு குரியன், சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ஜூலை காற்றில். ஜோஸ்வா ஸ்ரீதர் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. கஸ்துரி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார், கார்த்தியை அழைத்து உங்க அப்பா இல்லை, ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம் என்றார். அதற்கு கார்த்தி சிரித்தபடி இது ரொம்ப தேவையில்லாதது என்று செல்ஃபிக்கு போஸ் கொடுக்காமல் சென்றுவிட்டார்.

ks1

மரியாதை என்பதே இல்லாமல் பொய் விட்டது இந்த செல்ஃபியால் பலருக்கும். கேட்டு போட்டோ எடுக்கணும் என்று இல்லை. மூஞ்சிக்கு முன்னாடி போன் கொண்டு வந்து நிறுத்துவது. அந்த பிளாஷ் வேற பின்னாடி ஒன்று, முன்னாடி ஒன்று. அவ்வளவு பிளாஷ் கண்ணில் பட்டால் மைக்ரேன் இருக்கிறவன் என்னாவான். ஒரு விவஸ்தையே கிடையாது என்று நினைக்கிறேன். மரியாதையாக கேட்டுவிட்டு போட்டோ எடுக்க வேண்டும் என்று தெரியாத அளவுக்கு நாம் ஆகிவிட்டோம் என்று வருத்தமாக உள்ளது என்றார் கார்த்தி. இந்த நிகழ்ச்சியில் நடந்த சம்பவத்தை வைத்து கஸ்தூரியை நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர். அனுமதி இல்லாமல் செல்ஃபி எடுத்த இரண்டு பேரின் செல்போன்களை தட்டிவிட்டார் சிவகுமார். அதே சமயம் அனுமதி கேட்டவர்களுக்கு செல்ஃபிக்கு போஸ் கொடுத்தார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here