நுரையீரலில் உள்ள சளியை விரட்ட வீட்டிலுள்ள இவற்றை பயன்படுத்தினாலே போதும்….பகுதி -1

0
30
3D illustration of Lungs - Part of Human Organic.

சளி தொல்லை இல்லாத ஆளே இல்லை. காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை சளி பிரச்சினையால் அன்றாடம் அவதிப்படுவோர் நிறைய பேர். சளி தொல்லையை அவ்வளவு சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது. நுரையீரலில் உண்டாக கூடிய சளியானது பல்வேறு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த பதிவில் எந்தெந்த உணவுகள் நுரையீரலுக்கு ஆபத்து ஏற்படுத்தாமல் இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம். இந்த பதிவில் எந்தெந்த உணவுகள் நுரையீரலுக்கு ஆபத்து ஏற்படுத்தாமல் இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

e1

வெங்காயம் :

நுரையீரலில் சேர கூடிய சளியை விரட்ட பல வைத்தியம் இருந்தாலும் அவற்றில் மிக எளிமையான வழி வெங்காயம். உணவில் போதுமான அளவுக்கு வெங்காயத்தை சேர்த்து கொண்டாலே நுரையீரலில் இருக்க கூடிய சளி நீங்கி விடும். மேலும் சளி உற்பத்தி ஆவதையும் வெங்காயம் தடுத்து விடும்.

n1

இஞ்சி:

எந்த அளவிற்கு உணவில் இஞ்சியை சேர்த்து கொள்கிறோமோ அந்த அளவிற்கு நல்லது. இஞ்சியில் சளியை ஒழிக்கும் திறன் உள்ளது. அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியை இரட்டிப்பாக்கும் தன்மையும் உடையது. ஆகவே இஞ்சியை அதிக அளவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

Turmeric and turmeric powder on wooden background

மஞ்சள் :

உணவு பொருட்களில் மருத்துவ குணம் கொண்ட பொருட்களில் மஞ்சளும் ஒன்று. அன்றாடம் மஞ்சளை உணவில் சிறிதளவு சேர்த்து வந்தாலே நுரையீரல் பிரச்சினைகள் உண்டாகாது. சளியை உண்டாக்கும் கிருமிகளையும் இது கொல்லும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here