ருசியான காலண்டுலா தக்காளி ரசம் செய்யணுமா ? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்….

0
28

தக்காளி மற்றும் காலெண்டுலா ரசம்:

மழை மற்றும் குளிர் காலங்களில் பொதுவாகவே காய்ச்சல், சளி போன்றவற்றைப் போக்க உதவும் காலெண்டுலா. இது மிளகு போன்ற சுவையைத் தரும் ஒரு பொருள். ஆர்கானிக் செடிகளை பயன்படுத்தி சமைப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.

hr3

தேவையான பொருட்கள்:

2 தக்காளி, 1 காலெண்டுலா பூ, 1/2 ஸ்பூன் சீரகம், 2 பூண்டு பற்கள், புதினா சிறிதளவு, ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் உப்பு தேவையான அளவு.

செய்முறை:

தக்காளியை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும், சீரகம் மற்றும் பூண்டை எண்ணெய் இல்லாமல் வறுத்துக் கொள்ளவும், வறுத்த சீரகம் மற்றும் பூண்டை தக்காளியுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும், ஒரு கப் தண்ணீரில் காலெண்டுலா பூக்களை கொதிக்க விடவும், எண்ணெய்யை வாணலியில் சூடாக்கி, அதில் தக்காளி விழுது, பெருங்காயம், உப்பு ஆகியவற்றை சேர்த்து மிதமான சூட்டில் வைக்கவும், காலெண்டுலா பூக்கள் கொதிக்க வைத்த நீரில் இருந்து அவற்றை நீக்கி அந்த நீரை தக்காளி கலவையுடன் சேர்த்து கொதிக்க விடவும், புதினா இலைகளை மேலே தூவி இறக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here