நெஞ்சமுண்டு மெர்மையுண்டு ஓடு ராஜா .. நல்ல முயற்சி …..

0
34

ரியோ, விக்னேஷ்காந்த் இருவரும் ஒரு யூடியூப் சேனலுக்காக பிராங்க் ஷோ நடத்துபவர்கள்.  இப்படி ஒரு முறை நடத்தும் போது  நாயகியின் கழுத்தில் கை வைத்து பிராங்க் ஷோ நடத்தும்போது அவர்களின் தைரியத்தை பார்த்த பிரபல தொழிலதிபர் ராதாரவி அவர்களிடம் ஒரு வேலையை தருகிறார். இருவரும் சேர்ந்து மூன்று டாஸ்க்குகளை சரியாக செய்ய வேண்டும். அப்படி செய்தால் கோடிக்கணக்கில் பணம் தருகிறேன் என்று ராதாரவி கூறும் கண்டிஷன்களை ஏற்றுக்கொண்டு களமிறங்குகின்றனர் ரியோ, விக்னேஷ் காந்த். அந்த மூன்று டாஸ்குகள் என்ன? அதில் உள்ள ஆபத்து என்ன?  எதற்க்காக ராதாரவி  இந்த மூன்று டாஸ்குகளையும் கொடுத்தார்? குறிப்பாக உயிருக்கே ஆபத்தான அந்த மூன்றாவது டாஸ்க்ன் நோக்க்ம் என்ன? என்பதுதான் இந்த படத்தின் அடுத்த பாதி.

noo4

யூடியூபில் பிரபலமான ரியோ ராஜ் இந்த படத்தில் காமெடி கலந்த நாயகனாக வளம் வருகிறார். சில  காட்சிகள் தவிர நடிப்புக்கும் இவருக்கும் சரி பட்டு வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். செண்டிமெண்ட், ரொமான்ஸ் காட்சிகளில் சொதப்பி விட்டார் போல. விக்னேஷ் ஒரு படத்தில் இருந்தால் அந்த படம் நிச்சயம் சொதப்பிவிடும் என்பதற்கு  ‘தேவ்’ ஒரு நல்ல உதாரணம். இந்த படத்தை இரண்டாவது உதாரணமாக எடுத்துக்கலாம். நல்ல காமெடிக்கான வாய்ப்புகள் இருந்தும் காமெடிக்கு பதில் கடுப்பு தான்.கதாநாயகி கதைக்கு தேவையா என்ற கேள்வி வருகிறது. சம்மந்தமே இல்லாமல் கதாநாயகிக்கு ஒரு ரகசியம் வேறு.

nno2

நாஞ்சில் சம்பத் வரும் காட்சிகளில் தியேட்டரே கலகலக்கின்றது. அவரின் காமெடி தான் காமெடியின் உச்சக்கட்டம். வழக்கம்போல்  ராதாரவி தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர் அழுத்தமானதாக இருந்தாலும் சிறப்பாக நடித்துள்ளார். எமோஷனல் காட்சிகளிலும் அவர் நடிப்பு கைதட்ட வைக்கிறது. ஷபீர் இசை, செந்தில்குமாரின் ஒளிப்பதிவு மற்றும் ஃபென்னி ஒலிபர் படத்தொகுப்பு ஆகியவை அனைத்துமே பரவாயில்லை. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஒரு மினிமம் பட்ஜெட் படம் என்பதால் அவருடைய முதலுக்கு மோசமில்லை.

noo3

இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் படம் முழுக்க  மொக்கை காட்சிகளால் நிறைவு செய்து கிளைமாக்யை மரண மாஸாக தந்துள்ளார்.  கிளைமாக்ஸில் அவர் கூறியிருக்கும் கருத்து எழுந்து நின்று கைதட்ட வைக்கிறது.  மொத்தத்தில் கடைசி இருப்பது நிமிடங்களுக்காக ஒன்றரை மணி நேரம் பொறுத்தது பரவாயில்லை போலும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here