காயமடைந்த ரசிகைக்கு… நேரில் சந்தித்து பரிசளித்த ரோஹித் சர்மா…. கண்கலங்கிய ரசிகை!!

0
28

இந்திய அணி நேற்று நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில்  வங்காள தேசத்துடன் மோதியது. இதில் இந்தியா அபார  வெற்றி வாகை சூடியது. இந்திய வீரரான ரோகித் சர்மா சதம் அடித்து தனது ஆட்டத்தை  சிறப்பாக ஆடினார். உலக கோப்பை தொடங்கியது முதலே, ரோகித் சர்மா ஃபுல் பார்மில் இருக்கிறார் என அவரது ரசிகர்கள் மற்றும் பல கிரிக்கெட் வீரர்கள் கூறி வருகின்றனர்.

201907031010118724_1_rohitt._L_styvpf

நேற்றைய ஆட்டத்தில் களமிறங்கிய ரோகித், 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் அடித்து பட்டையை கிளப்பினார்.  இறுதியில் போட்டியின் ஆட்டநாயகனாகவும் ரோகித் தேர்வு செய்யப்பட்டார். ஆட்டத்தில் ரோஹித் சிக்சர் அடித்தபோது பந்து, மைதானத்தில் ஆட்டத்தை  ரசித்துக் கொண்டிருந்த மீனா எனும் ரசிகை மேல் விழுந்தது.  அதில் அவர் லேசாக காயமடைந்தார்.  இதனை கவனித்த ரோஹித் போட்டி முடிந்தவுடன் மீனாவை சந்தித்து பேசினார்.

rh1

மீனாவிடம் நலம் விசாரித்த ரோஹித், பின்னர் சிறிது நேரம் அவர்களுடன்  உரையாடிவிட்டு  அவர் கையொப்பமிட்ட கேப் ஒன்றை அவருக்கு பரிசாக கொடுத்தார். இச்சம்பவம் அந்த ரசிகையையும் பார்வையாளர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டது என்று தான் கூற வேண்டும். Credits to malaimalar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here