ரஜினி அஜித் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட சிம்பு ரசிகர்…

0
43

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அஜித் இருவரது படமும் பொங்கலுக்கு வெளியானது. அந்த படத்திற்க்கு வந்த சிம்பு ரசிகர் மன்ற தலைவர் மச்சி மதன். அங்கு வைக்க பட்டுள்ள பேனர்களை எல்லாம் பார்த்து விட்டு ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் சிம்பு ரசிகரான மச்சி மதன் சிம்புவின் அடுத்த படமான வந்தா ராஜா வா தான் வருவேன் படம், பேட்ட மற்றும் விசுவாசம் படம் ஓடும் திரையரங்குகளில் திரை இடவில்லை என்றால் பேட்ட மற்றும் விசுவாசம் படம் பேனர்கள் கிழிக்கப்படும் என்று சவால் விடுத்திருந்தார்.

d

அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வலம் வைத்துக் கொண்டு இருந்தது. இதை பார்த்த ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் கோபமடைந்தார் மற்றும் மீம்ஸ் மூலம் மச்சி மதனை வச்சி செய்து விட்டனர். பின்னர் மச்சி மதன் ரஜினி அஜித் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோ வெளியிட்டார் அதில் அவர் யார் மனதையும் புண் படுத்தும் வகையில் அதை வெளியிட வில்லை என்றும், அப்படி அது யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னித்து விடுமாறு கூறி இருந்தார்.  இந்த வீடியோ நெட்டிசன்கள் கிண்டலுக்கு வழிவகுத்துள்ளது. மேலும் தலைவன் எவ்வழியோ ரசிகனும் அவ்வழியே என்று கலாய்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here