முகத்தில் எண்ணெய் வடிகிறதா ? அப்போ இனிமே சர்க்கரை வள்ளிக் கிழங்கை இப்படி பயன்படுத்திப் பாருங்கள்

0
38

அழகா தோற்றமளிக்க யார் தான் விருப்ப பட மாட்டார்கள். நாம் அழகா தோற்றமளிக்க பல வழிகளை கையாள்கிறோம் , பல வகையான  கிரீம்ஸ், காஸ்மெடிக்ஸ் என பலவற்றை முயற்சி செய்கிறோம் , குறிப்பாக முகப்பரு , கரும்புள்ளிகள் , கருவளையம் போன்ற பிரச்னையைத் தீர்க்க இவற்றை பயன் படுத்துகிறோம். ஆனால் அவை நமக்கு முழுமையாக பலனை தருவதில்லை மாறாக பல பின்விளைவுகளை தந்துவிடுகிறது .

நமது வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இது போன்ற  பிரச்சனைகளுக்கு முடிவு கட்டிவிடலாம் . குறிப்பாக சர்க்கரை வள்ளி கிழங்கை வைத்து முகத்தில் எண்ணெய் வடிதல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.  அது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள் .

முக வறட்சியை குறைக்க

முகம் பார்ப்பதற்க்கு மிகவும் வறட்சியாக காணப்படுகிறதா ? அப்போ இதை செய்து பாருங்கள் .

தேவையான பொருட்கள் :

தயிர் 1  ஸ்பூன்

ஓட்ஸ் 1 ஸ்பூன்

சர்க்கரை வள்ளி கிழங்கு பாதி

செய்முறை :

வேகவைத்த சர்க்கரை வள்ளி கிழங்கை நன்றாக மசித்து வைத்துக் கொள்ளவும். பின்னர் அதனோடு ஓட்ஸ் மாற்று தயிரை சேர்த்து அரைத்துவிடவும் அதனை முகத்தில் பூசி  20  நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். தொடர்ந்து இப்படி செய்து வர முகம் வறட்சி மாறி மென்மையாக மாறி வரும் .

முகம் பொலிவு பெற:

முகத்தை வெண்மையாக மாற்றுவதில் சர்க்கரை வள்ளி கிழங்கு பெரும் பங்கு வகிக்கிறது . அதற்கு வேக வைத்த கிழங்கை நன்றாக மசித்து அதனை அப்படியே நேரடியாக முகத்தில் பேக் போன்று பூசவும் .அதிலுள்ள  ஊட்டச்சத்துக்கள் முகத்தின் கருமையை போக்கி முகத்தை பொலிவு பெற செய்யும் .

முகத்தில் எண்ணெய் வடித்தலை தடுக்க:

முகத்தில் எண்ணெய் வடித்தலின் முடிவு பருக்களுக்கு வலி அமைக்கும் . அதிலிருந்து விடுபட இதனை பயன்படுத்துங்கள் .

 

அதற்க்கு தேவையானவை:

சர்க்கரை வள்ளி கிழங்கு பாதி

தேன் 1  ஸ்பூன்

 

கிழங்குடன் தேனை கலந்து நன்றாக அரைத்து கொள்ளவும். பின்னர் அதனை முகத்தில் தடவி  15  நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும் இவ்வாறு தொடர்ந்து செய்து வர கிழங்கின் அந்தோசைனின் முகத்தின் கருமையை போக்கி முகத்தில் எண்ணெய் வடித்தலை தடுக்கிறது.

கண்கள் வீக்கமா……?

கணினியை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு கண்கள் வீங்கினதுபோல் இருக்கும். இந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு சர்க்கரை வள்ளி கிழங்கு வேகவைத்த சர்க்கரை வள்ளி கிழங்கை இறங்க அறிந்து கண்கள் மேல் வைத்து  20 நிமிடம் கழித்து அகற்றவேண்டும். இவ்வாறு ஹோடர்ந்து செய்து வர கண் வீக்கம் குறைந்து விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here