ஒரே மாதத்தில் அடர்த்தியான மற்றும் நீளமான முடி வேண்டுமா ? அப்போ இந்த குறிப்பு உங்களுக்கு தான்

0
29

பொதுவாக எல்லாப்  பெண்களுக்கும் இருக்கும் ஒரு ஆசை என்றால் அது அடர்த்தியான மட்டும் நீளமான முடி என்று தான் சொல்ல வேண்டும். சரியான பராமரிப்பு இன்மை, வேலை, மாசு நிறைந்த சூழல் மாற்றும் உடல் சூடு போன்ற காரணங்களால் முடி உதிர்வு மற்றும் முடி பிளவு போன்ற பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடுகிறது. இனி முடியை பற்றிய கவலை வேண்டாம், இந்த குறிப்பு முற்றிலும் உங்கள் கவலையாய் போக்கி உங்களுக்கு உதவும்.

2b

தேவையான பொருட்கள் :

கருஞ்சீரக பொடி ஒரு கப், வெந்தய பொடி ஒரு கப் மற்றும் தேங்காய் எண்ணெய் 250 மிலி.

செய்முறை :

ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து சூடாக்க வேண்டும். பின்னர் ஒரு சிறிய பாத்திரத்தில் கருஞ்சீரக பொடி, வெந்தய பொடி மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கி, அந்த பாத்திரத்தை கொதிக்கும் சுடு தண்ணீர் பாத்திரத்தில் நடுவில் வைக்க வேண்டும். பின்னர் கொதிக்கும் நீரின் சூட்டில் எண்ணெய் சூடாக வேண்டும். பின்னர் எண்ணையை இறக்கி ஆறவைத்து வடிகட்டி, ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்து, தினசரி பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும்.

2a

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here