சுவையான முட்டை கொத்து சப்பாத்தி செய்யணுமா அப்போ இந்த குறிப்பு உங்களுக்கு தான்……

0
25

பொதுவாக குழந்தைகளுக்கு ஹோட்டல் உணவு என்றாலே தனி பிரியம் தான், ஆனால் எல்லா நேரமும் குழந்தைகளுக்கு ஹோட்டல் உணவு சத்தானது இல்லை. ஆனால் அவர்களுக்கு பிடித்த உணவை வீட்டிலேயே செய்து சத்தான உணவை தருவது மூலம் நமக்கும் சந்தோசம் அவர்களுக்கும் ஆனந்தம்.

5

தேவையான பொருட்கள் :

சப்பாத்தி – 5 , முட்டை- 2 , வெங்காயம் – 2 , தக்காளி – 2 , இஞ்சி பூண்டு விழுது – 2  ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன், பச்சை மிளகாய் – 2 , கரம் மசாலா தூள் – 1  ஸ்பூன்,கொத்தமல்லி, கறிவேப்பிலை  –  சிறிதளவு எண்ணெய்  – 4 ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப.

7

செய்முறை:

முதலில் சப்பாத்தியை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை போடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலில் எண்ணையை ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் தக்காளி சேர்த்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து வதக்க வேண்டும். எல்லாம் நன்றாக வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள சப்பாத்தியை சேர்த்து வதக்க வேண்டும், பின்னர் அதனோடு முட்டை சேர்த்து நன்றாக வதக்கி, கொத்தமல்லியை தூவி இறக்கி விட வேண்டும். சுவையான முட்டை கொத்து சப்பாத்தி ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here