மீண்டும் சுவைக்கத் தூண்டும் கடலை மாவு லட்டு… எளிய முறையில் எப்படி செய்யலாம் என்று காண்போம்…

0
25

பேஷன் ஹா லட்டு என்பது தமிழ்நாட்டில் கடலை மாவு உருண்டை என்று அழைக்கப்படுகிறது. இது பொதுவாகவே எல்லா சுப நிகழ்ச்சிகளின் போதும் பரிமாறி மகிழ்வர். சொன்னதுமே நாவில் எச்சில் ஊறும் இது விரைவாக வீட்டிலேயே குறைந்த சமையல் நேரத்தில் செய்து அசத்தலாம். இந்த லட்டை அட்டகாசமாக வீட்டிலேயே செய்து அசத்தலாம். எளிய முறையில் எப்படி லட்டு செய்வது என்பதை இந்த பதிவில் காண்போம்.

fl2

தேவையான பொருட்கள்:

பொடித்த சர்க்கரை – 1 கப், கடலை மாவு – 2 கப், நெய் – 3/4 கப், தண்ணீர் – 3 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் பொடி – சிறுதளவு, நறுக்கிய பாதாம் பருப்பு (அலங்கரிக்க) – 1 டேபிள் ஸ்பூன், நறுக்கிய பிஸ்தா பருப்பு (அலங்கரிக்க) – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

கடை காய்ந்தவுடன் நெய்யை ஊற்றவும். மிதமான சூட்டில் வைத்துக்கொண்டு கடலை மாவை போட்டு நன்றாக கிளறவும் தீயை குறைத்து வைக்கவும் அப்போது கருகாமல் இருக்கும். பிறகு மாவின் பச்சை வாசனை போகும் வரை குறைந்தது 10 நிமிடங்களாவது தண்ணீர் சேர்த்து கிளறவும். தண்ணீர் சிறிதளவு சேர்த்து நுரை நுரையாக தண்ணீர் மேலே எழும்பும் வரை சமைக்க வேண்டும். அந்த தண்ணீர் மறையும் வரை நன்றாக கலக்க வேண்டும். அதை இன்னொரு பவுலில் எடுத்து வைத்து 10 நிமிடங்கள் ஆற வைக்க வேண்டும். சர்க்கரையை சேர்த்து நன்றாக கலக்கவும் பிறகு ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை 10 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைத்து பிறகு அதை எடுத்து சமமான அளவில் லட்டு மாதிரி உருண்டை பிடித்து வைத்து அதன் நடுவில் நறுக்கிய பாதாம் பருப்பு மற்றும் பிஸ்தா பருப்பை வைத்து அலங்கரிக்கவும்.

fl4

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here